Year Ender

தமிழ் சினிமா 2021

DIN

ஜனவரி

11:திரையரங்குகளில் வெளியாகும் அதே தினத்தில் ஓடிடி தளத்திலும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

26: சூர்யா நடித்த "சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் பங்கேற்று பெருமையைப் பெற்றது.

பிப்ரவரி

3: இசையமைப்பாளர் இளையராஜா சென்னை தியாகராய நகரில் புதிய ஒலிப்பதிவு கூடத்தை தொடங்கினார்.

மே

15: கரோனா  பொது முடக்கம் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

ஜூன்

18: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்.

ஜூலை

2: ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் நடிகர் சூர்யா.

9: மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆகஸ்ட்

5:  திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித், தனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

23: திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது.

செப்டம்பர்

25: பாடகர் எஸ்.பி.பி.யின் முதலாமாண்டு நினைவு விழாவில் கண் கலங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.

அக்டோபர்

4: "அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு பாடிய பாடலையொட்டி, 45 ஆண்டு காலம் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி. என புகழாரம் சூட்டினார் நடிகர் ரஜினிகாந்த்.

25: 67-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விருதை வழங்கினார்.

நவம்பர்

1: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி.

2: திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவது 2021-ஆம் ஆண்டில் அதிகரித்தது. அந்த வகையில், நவ. 2-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது நடிகர் சூர்யாவின் ஜெய் பீம். க/பெ.ரணசிங்கம், சார்பட்டா பரம்பரை, மண்டேலா, திட்டம் 2 (பிளான் பி), டிக்கிலோனா, சித்திரைச் செவ்வானம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியாகின.

டிசம்பர்

1: தன்னை யாரும் "தல' அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் நடிகர் அஜித்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT