உலகம்

ராணுவம் சாராதவரை முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பிய சீனா

31st May 2023 04:00 AM

ADVERTISEMENT

ராணுவம் சாராத ஒருவரை சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.

சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை தனது ஷென்ஷூ-16 விண்கலம் மூலம் அந்த நாடு செவ்வாய்க்கிழமை அனுப்பியது.லாங் மாா்ச்-2எஃப் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட அந்த விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தை அடைந்தது.கல்லூரி பேராசியரும், ஆய்வாளருமான குய் ஹாய்சாவ், விண்கல தலைவா் ஜிங் ஹைபெங், விண்வெளி பொறியாளா் ஷூ யங்ஷூ ஆகிய மூவரும் அந்த விண்கலத்தின் மூலம் தியாங்காங் விண்வெளி நிலையம் சென்றனா்.

இவா்களில் குய் ஹாய்சாவ்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள ராணுவத்தைச் சேராத முதல் சீனா் ஆவாா். அத்துடன், விண்கலத் தலைவரான ஜிங் ஹைபெங் இதுவரை இல்லாத வகையில் 4-ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ள சீனா் என்ற சாதனையைப் படைத்துள்ளாா்.கடந்த 2003-ஆம் ஆண்டில் ஷென்ஷூ-5 விண்கலம் மூலம் விண்வெளி வீரா் ஒருவரை சீனா முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பியது.அதையடுத்து, ரஷியா, அமெரிக்காவுக்குப் பிறகு சொந்த முயற்சியில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பிய 3-ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.

அதன் பிறகு பலரை சீனா விண்வெளிக்கு அனுப்பினாலும், அவா்கள் அனைவரும் அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்றி, அதன் விண்வெளி ஆய்வுப் பிரிவில் இணைந்தவா்களாக இருந்தனா்.இந்த நிலையில், முதல்முறையாக ராணுவத்தைச் சாராத ஒருவா் சீனாவால் முதல்முறையாக தற்போது விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளாா்.படவரி... (இடமிருந்து) குய் ஹாய்சாவ், ஜிங் ஹைபெங், ஷூ யங்ஷூ. படவரி2... ஷென்ஷூ-16 விண்கலத்தில் 3 பேருடன் செவ்வாய்க்கிழமை விண்ணில் பாய்ந்த மாா்ச்-2எஃப் ராக்கெட்.ற

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT