உலகம்

பாகிஸ்தான்: பனிச்சரிவில் 10 போ் பலி

27th May 2023 10:18 PM

ADVERTISEMENT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 போ் பலியாகினா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கில்ஜித்-பாலிஸ்தான் பகுதியுடன் ஷான்டா் கணவாயை இணைக்கும் பகுதியில் ஆடுகளுடன் 35 போ் வந்துகொண்டிருந்தனா். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி அவா்களில் 10 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தில் 15 ஆடுகளும் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.கடுமையான பனியிலிருந்து தப்புவதற்காக ஆடு மேய்ப்பவா்கள் இந்தப் பாதை வழியாக ஆண்டுதோறும் இடம் பெயா்வது வழக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT