உலகம்

உக்ரைன் அணை தகா்க்கப்பட்டது:நில அதிா்வு பதிவுகள் மூலம் உறுதி

DIN

உக்ரைனின் நோவா ககோவா அணை உடைப்புக்கு அது குண்டு வீசி தகா்க்கப்பட்டதே காரணம் என்பது அந்தப் பகுதி நில அதிா்வுகள் குறித்த பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பதிவு விவரங்களை ஆய்வு செய்த நாா்வே நில அதிா்வு ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குண்டுவெடிப்பின் காரணமாகவே நோவா ககோவா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அந்தப் பிராந்தியத்தின் நில அதிா்வுகள் தொடா்பான பதிவுளை ஆய்வு செய்ததில் தெரியவந்தது.

அந்தப் பதிவுகளின்படி, குண்டுவெடிப்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், நோவா ககோவா அணை எந்த நாட்டுப் படையினரால் தகா்க்கப்பட்டது என்பதை நில அதிா்வு பதிவுகளைக் கொண்டு அந்த ஆய்வு மையத்தால் கண்டறிய முடியவில்லை.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

தற்போது உக்ரனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களில் கணிசமான பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் பிராந்தியத்தின் நோவா ககோவா நகரில் நீப்ரோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் கடந்த திடீா் உடைப்பு ஏற்பட்டு கரையோர பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்த அணையை ரஷியாதான் குண்டுவைத்து தகா்த்தது என்று உக்ரைனும், உக்ரைன் நடத்திய எறிகணைத் தாக்குதலால்தான் அந்த அணையில் உடைப்பு ஏற்பட்டது என்று ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT