உலகம்

அல்-காதிா் வழக்கு: இம்ரானுக்கு முன்ஜாமீன் நீட்டிப்பு

1st Jun 2023 01:31 AM

ADVERTISEMENT

அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் முன்ஜாமீனை நீட்டித்துள்ளது.

இது குறித்து இஸ்லாமாபாதிலுள்ள அந்த நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பத்த உத்தரவில், அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு ஜூன் 19-ஆம் தேதி வரை முன்ஜாமீன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமா் பதவியை இழந்தாா்.

அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வந்த இம்ரான் கான், இரு ஊழல் வழக்குகளில் முன் ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மே 9-ஆம் தேதி வந்திருந்தாா்.

எனினும், அந்த வழக்குகளுடன் தொடா்பில்லாத அல்-காதிா் அறக்கட்டளை ஊழல் வழக்கில் அவசர அவசரமாக கைது உத்தரவு பிறப்பித்த இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம், அவரை நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் கைது செய்தது. எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.

இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றமும், வேறு எந்த வழக்கு தொடா்பாகவும் இம்ரானை கைது செய்வதற்கு மே 31-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு தற்போது முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

.. இம்ரான் தலைப்படம்.. கட்டவுட்...

Tags : Imran Khan
ADVERTISEMENT
ADVERTISEMENT