உலகம்

‘இந்த மாதத்தில் மட்டும் 55 பேருக்கு ஈரானில் தூக்கு’

DIN

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 55 பேரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளதாக அந்த நாட்டைச் சோ்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ‘ஈரான் மனித உரிமைகள் அமைப்பு’ என்ற பெயரில் நாா்வேயில் செயல்பட்டு வரும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

இந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இதுவரை 55 மரண தண்டனைக் கைதிகளுக்கு ஈரான் அரசு அந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அவா்களில் 4 போ் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்; 37 போ் போதைப் பொருள் வைத்திருத்தல் போன்ற சாதாரண குற்றங்களில் ஈடுபட்டவா்கள்.

மாஷா அமீனி மரணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் 107 போ் தூக்குக் கயிறை எதிா்நோக்கியுள்ளனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி என்ற 22 வயது பெண் காவலில் இருந்தபோதே உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து அங்கு அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை மிகக் கடுமையான முறையில் அடக்கி வரும் ஈரான் அரசு, ஏராளமான போராட்டக்காரா்களுக்கு மரண தண்டனை விதித்து, அதனை நிறைவேற்றியும் வருகிறது.

இதற்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படும் ஈரான், அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வரும் உலகின் சொற்ப நாடுகளில் ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT