உலகம்

முகநூலில் மீண்டும் டிரம்ப்

DIN

முகநூலில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் தோ்தல் முடிவுகளை ஏற்காமல் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதால் முகநூலில் டிரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது. அவா் இனியும் அதே போன்ற பதிவுகளை வெளியிட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து டிரம்ப் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இதே விவகாரத்தில் டிரம்புக்கு ட்விட்டா் விதித்திருந்த தடையை, தொழிலதிபா் எலான் மஸ்க் அந்த சமூக ஊடகத்தைக் கையகப்படுத்திய பிறகு நீக்கினாா்.

அதற்குப் பிறகும் ட்விட்டரில் டிரம்ப் எந்தப் பதிவையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT