உலகம்

கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து

16th Jan 2023 05:00 AM

ADVERTISEMENT

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது பொங்கல் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கனடா உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் சமூகத்தினர் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். நான்கு நாள்கள் நடைபெறும் இந்த பண்டிகையில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT

அனைவருக்கும் அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம் வேண்டி எங்களது குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT