உலகம்

கார் விபத்துகளில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படக் காரணம்?

12th Jan 2023 12:37 PM

ADVERTISEMENT

கார் விபத்துகளில் சிக்கும் ஆண்களை விடவும், பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வும் தேடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று, வாகனப் பாதுகாப்பில் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவது தொடர்பான ஆய்வை நடத்தியிருக்கிறது. அதில், கார் விபத்தில் சிக்கும் போது ஆண்களை விட 73 சதவீதம் கூடுதலாக பெண்கள் காயமடைகிறார்கள். பலியாவது 17 சதவீதம் அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. 51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்

கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரம் பேர் கார் விபத்தில் சிக்கும்போது, அதில் ஆண்களை விடவும் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது தரவுகள்.

ADVERTISEMENT

இதில் குறிப்பிடத்தக்க ஆய்வை நடத்திய நிறுவனம், பொதுவாக, விபத்திலிருந்து பயணியைக் காக்க வாகனத்தின் வடிவமைப்பு சோதனையின்போது பயன்படுத்தப்படும் மனித மாதிரிகள் அனைத்தும் ஆண்களின் மாதிரிகளாகவே இருந்து வந்ததைக் கண்டறிந்துள்ளது.

இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்

ஒரு காரை உற்பத்தி செய்யும் நிறுவனம், அந்தக் காரின் பாதுகாப்புத் திறனை பரிசோதிக்கும் போது காருக்குள் வைக்கும் மனித மாதிரிகள் அனைத்தும் ஆண்களின் உருவ மாதிரிகளாகவே உள்ளன. இதனால்தான், பெண்கள் அதிகம் காயமடைவதும் பலியாவதும் தொடர்வதாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பான புரிதல் ஏற்பட்டதும், பொறியாளர் மற்றும் நிபுணர் குழுவினர், பெண்களுக்கான மாதிரிகளைத் தயாரித்து கார்களில் வைத்து, பாதுகாப்புச் சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க | குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு - திரை விமர்சனம்

இது குறித்து ஆங்கில ஊடகத்திடம் தகவல் தெரிவித்த பொறியாளர் குழுவினர், சட்டம் எவ்வாறு பெண்களுக்கு சமஉரிமை அளிக்க பாடுபடுகிறதோ அது போல, வாகனப் பாதுகாப்பிலும் பெண்களின் உரிமையை நிலைநாட்ட பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒரு விபத்து நிகழும் போது, ஆண்களும் பெண்களும் தனித்தனியான காயம் மற்றும் பலியாவதற்கான அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். இதுவரை வெறும் ஆண் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யும் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், இனி பெண்களின் மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது.
 

Tags : Car Accident
ADVERTISEMENT
ADVERTISEMENT