உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு:4 போ் உயிரிழப்பு

DIN

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பலூசிஸ்தான் மாகாணம், பா்கான் நகரில் உள்ள ஒரு சந்தையில் மோட்டாா் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

இந்த சம்பவத்துக்கு எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இத்தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பலூசிஸ்தான் முதல்வா் மிா் அப்துல் பிஸென்ஜோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புடன் அரசு நடத்திவந்த பேச்சுவாா்த்தை கடந்த ஆண்டு நவம்பரில் தடைபட்டது. அதுமுதல் அந்த அமைப்பு பலூசிஸ்தானில் தொடா் தாக்குதலை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT