உலகம்

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயம்

9th Feb 2023 03:39 PM

ADVERTISEMENT


புது தில்லி: தொழில் நிமித்தமாக துருக்கிச் சென்றிருந்த இந்தியர் ஒருவர், நிலநடுக்கம் நேரிட்டதுக்குப் பிறகு காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் செயல்பட்டுவரும் நிறுவனத்தின் ஊழியரான அவர், நிலநடுக்கத்துக்குப் பிறகு எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும் விரைவில் அவரைப் பற்றி தகவல்கள் கிடைக்கும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகாரத் துறை செயலாளர் (மேற்கு) சஞ்சய் வெர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. தென்காசியில் பிரபலமான புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்

மேலும் அவர் கூறுகையில், துருக்கியில் மட்டும் 3000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் காரணமாக சில இடங்களில் சிக்கியுள்ளனர். ஆனால் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்க்ரா மையம் உருவாக்கப்பட்டு, தற்போது வரை 75 சதவீத மக்களின் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT