உலகம்

ரொட்டி சுடும் பில்கேட்ஸ்! இந்திய இசையமைப்பாளர் பாடலுடன்...

9th Feb 2023 07:27 PM

ADVERTISEMENT

 

இந்திய மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ரொட்டியை பில் கேட்ஸ் சமைத்து உண்ணும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநரான ஈடன் பெர்நாத் உடன் அவர் இந்த ரொட்டிகளை சமைத்தார்.

இது தொடர்பாக விடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், எனக்கு மிகவும் பிடித்த சமையல் கலைஞரான ஐடனுடன் சேர்ந்து, இந்திய ரொட்டிகளை சமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

படிக்கம் இல்லை.. மனைவியின் உடலைத் தோளில் சுமந்து சென்ற கணவன்! 

மேலும் அந்த விடியோவில் இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான முகமது ரஃபிக் பாடலை பின்னணி இசையாக பில்கேட்ஸ் சேர்த்துள்ளார். 

அந்த விடியோவில், ஈடனுடன் சேர்ந்து மாவு பிசையும் பில்கேட்ஸ், சப்பாத்தி கட்டை வைத்து சப்பாத்தி உருட்டி அதை சுடுகிறார். பின்னர், ஐடனிடம் சொல்வதைப் போன்று, சமையல் படத்துக்கு நன்றி என்ற வரியை இணைத்துள்ளார். 

இந்த விடியோவுக்கு பதிலளித்துள்ள சமையல் கலைஞர் ஈடன், சமையல்காரருக்குச் சேரவேண்டிய ரசீதுக்கு ஒப்புதல் அளித்ததுக்கு நன்றி. மீண்டும் உங்களுடன் சேர்ந்து சமைக்க ஆர்வமாக உள்ளேன் என பதிலளித்துள்ளார். 

படிக்ககாதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bill Gates (@thisisbillgates)

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT