உலகம்

கடந்த 25 ஆண்டுகளில் உலகம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கங்கள்

8th Feb 2023 11:40 AM

ADVERTISEMENT



துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

பல இடங்களில் இன்னமும் மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மிகக் குளிர் மற்றும் பனியும் மீட்புப் பணியை சவாலாக்கியிருக்கிறது.

இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி

கடந்த 25 ஆண்டுகளில் உலகம் சந்தித்த மிக மோசமான நிலநடுக்கங்கள் என்றால்...
2022 ஜூன் 22ல் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் 1,100 பேர் மரணமடைந்தனர். அப்போது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

2021, ஆகஸ்ட்  14ல்.. ஹைதி பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 2,200 பேர் பலியாகினர்.

இதையும் படிக்க.. மூன்று மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

2018, செப்டம்பர் 28ல் இந்தோனேசியாவில் நேரிட்ட நிலநடுக்கம் 7.5 ஆகப் பதிவாகியிருந்தது. 4,300 பேர் பலியாகினர்.

2015, ஏப்ரல் 25ல் நேபாளத்தில் 7.8 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி 8,800 பேர் பலியாகினர்.

2011, மார்ச் 11ல் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 20 ஆயிரம் பேர் இன்னுயிரை இழந்தனர்.

2010, ஜனவரி 12ல், ஹைதியில் நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர்.
2008ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்ட 87,500 பேரை பலி வாங்கியது.
2006, மே 27ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜாவாவை தாக்கிய நிலநடுக்கத்தில் 5,700 பேர் மரணமடைந்தனர்.

இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!

2005ஆம் ஆண்டு அக்டோபர் 8ல் பாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கம் 80 ஆயிரம் பேரை பலிவாங்கியது

2005ஆம் ஆண்டு மார்ச் 28ல் சுமத்ரா தீவில் உண்டான நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து உண்டான ஆழிப்பேரலையும் 2,30,000 பேரின் மரணத்துக்குக் காரணமாகின. சுமார் 12க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்தன.

2003ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

2003ஆம் ஆண்டில் மே 21ஆம் தேதி அல்ஜீரியாவில் 6.8 அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 2,200 பேர் பலியாகினர்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 26ல் குஜராத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் 20,000 பேர் மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் துருக்கியில் நேரிட்ட நிலநடுக்கத்தில் 18,000 பேர் பலியாகினர்.

1998ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி 6.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஆஃப்கானிஸ்தானில் 4,000 பேர் பலியாகக் காரணமாக இருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT