உலகம்

துருக்கியில் 2-வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்: இதுவரை 4,372 பேர் பலி!

DIN

துருக்கில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது அங்காரா மாகாணத்தின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் கோல்பாசி நகரில் இன்று கலை 8.43-க்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,372-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

சில விநாடிகளுக்குள் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்துக்குப் பின்னா் ஏற்பட்ட அதிா்வுகளும் நீண்ட நேரத்துக்கு உலுக்கிக் கொண்டிருந்தன. மலைபோல் குவிந்த கட்டட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பவுள்ளது.

100 பேரைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் துருக்கிக்குச் செல்ல தயாராகவுள்ளன. அத்தியாவசிய மருந்துகளுடன் மருத்துவக் குழுக்களும் தயாராகவுள்ளன.

துருக்கி அரசு மற்றும் அங்காரா, இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களின் ஒருங்கிணைப்புடன் நிவாரண உதவிகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT