உலகம்

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலி

DIN

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே திங்கள்கிழமை(பிப்.6) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவானது. காசியான் டெப் மாகாணம் நுர்நாகி நகரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. 

மேலும், இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 53-க்கும் மேற்பட்டோர்  பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. 

சிரியாவில் 45 பேர் பலி:
துருக்கியைத் தொடர்ந்து சிரியாவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 45க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT