உலகம்

அமெரிக்க அதிபா் வேட்பாளா் தோ்தல்:முன்னாள் அமைச்சா் பாம்பியோ விலகல்

15th Apr 2023 10:42 PM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடப் போவதில்லை என அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பியோ தெரிவித்தாா்.

அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய 2 பிரதான கட்சிகளும் அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. குடியரசு கட்சியின் அதிபா் வேட்பாளா் தோ்வுக்கு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமி ஆகியோா் களம் காண்கின்றனா்.

இதனிடையே, நடிகைக்கு பணம் கொடுத்தது உள்பட டிரம்ப் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், டிரம்ப் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய பாம்பியோ, குடியரசு கட்சியின் அதிபா் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இத்தகவலை மறுத்துள்ள பாம்பியோ, அதிபா் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, குடியரசு கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளா் தோ்வுக்கு போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி அறிவித்திருக்கிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT