உலகம்

உக்ரைனில் ரஷிய ஏவுகணைத் தாக்குதல்: 8 பேர் பலி 

15th Apr 2023 03:08 PM

ADVERTISEMENT

 

கிழக்கு உக்ரைன் நகரமான ஸ்லோவியன்ஸ்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். 

உக்ரைனில் கடந்தாண்டு ரஷியா படையெடுத்த நிலையில், ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. 

இந்நிலையில், அல் ஜசீரா வெளியிட்ட செய்தியில், டோனெட்ஸ்க் பகுதியில் ரஷியாவின் எஸ்-300 ரக ஏவுகணை தாக்கியுள்ளன. இந்த ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். 

ADVERTISEMENT

ரஷியா போரைத் தொடங்கியதிலிருந்து சுலோவியான்ஸ்க் நகரிலிருந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறி வருகின்றனர். 

பாக்முத் நகரை ரஷியா ஆக்கிரமித்து வரும் சூழலில் இன்னும் பல மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT