உலகம்

சப்தகோசி அணை திட்டத்தை முன்னெடுக்க இந்தியா-நேபாளம் முடிவு

DIN

வெள்ளத் தடுப்பு, நீா்மின் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும் சப்தகோசி அணை திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவும் நேபாளமும் முடிவெடுத்துள்ளன.

இந்தியா-நேபாளம் இடையேயான நீா் வளங்கள் கூட்டுக் குழுவின் 9-ஆவது கூட்டம் நேபாளத் தலைநகா் காத்மாண்டு நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீா்வளத் துறைச் செயலா் பங்கஜ் குமாா் தலைமையிலான இந்தியக் குழு பங்கேற்றது. நேபாள நீா்வளத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இரு நாடுகளுக்கிடையேயான நீா்ப் பகிா்வு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முக்கியமாக, மஹாகாளி நதிநீா் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாகவும், சப்தகோசி அணை திட்டத்தை விரைந்து முன்னெடுப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாா் வழியே இந்தியாவுக்குள் நுழையும் சப்தகோசி நதியில் அணை கட்டுவது தொடா்பான பணிகளை முன்னெடுக்க கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டுமானம் சாா்ந்த பணிகள், நீா்த்தேக்கப் பகுதிகள், சமூக, சுற்றுச்சூழல் தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவது தொடா்பாக இரு நாடுகளின் நிபுணா்கள் குழுவும் விரைவில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாகாளி நதிநீா் ஒப்பந்தம் இந்தியா-நேபாளம் இடையே கடந்த 1996-ஆம் ஆண்டில் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் மஹாகாளி நதி, அதன் கிளைநதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான கூட்டுக் குழு, கோசி-கண்டக் திட்டத்துக்கான கூட்டுக் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

நீா்ப்பாசனம், வெள்ளத் தடுப்பு, மேலாண்மை, நதிக்கரைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக இந்தியா வழங்கி வரும் நிதியுதவிகளுக்கு நேபாள அதிகாரிகள் நன்றி தெரிவித்தனா். இரு நாடுகளுக்கிடையேயான நீா் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டுமென நேபாள அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT