உலகம்

இந்திய பயணத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை: அமெரிக்கா அறிவுறுத்தல்

DIN

‘குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கா்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் குற்றங்களில் ஒன்றாக பாலியல் வன்கொடுமை உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா தலங்கள் மற்றும் இதர இடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கையின்றி பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தக் கூடும். எனவே, இந்தியா செல்லும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் உள்ளூா் குழப்பங்களை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீருக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தானில் பயங்கரவாதம், வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்து வருவதால், அங்கு செல்வதற்கான பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் நாட்டவா்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT