உலகம்

வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி

7th Oct 2022 06:21 PM

ADVERTISEMENT

கோப்புகள் அனுப்புவதை எளிதில் தெரிந்துகொள்வது தொடர்பாக புதிய வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் பிரபல இணைய உரையாடல் தளமான் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். இந்த பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

இதையும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்

அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்பப்படும் கோப்புகளுடன் அவை குறித்த செய்தியை தட்டச்சு செய்து அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கப் பெறலாம் எனவும் சோதனை முறையில் உள்ள இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | தனியார் டாக்ஸி செயலிகளுக்கு முற்றுப்புள்ளி: பெங்களூரு ஓட்டுநர்களின் புதிய முயற்சி

தற்போது பயன்பாட்டின்படி கோப்புகளை வெறுமனே மட்டுமே அனுப்ப முடியும். அதனுடன் எத்தகைய செய்தியையும் இணைக்க முடியாது. மாறாக புதிய செய்தியையே தட்டச்சு செய்து அனுப்ப முடியும். 

Tags : Whatsapp Meta
ADVERTISEMENT
ADVERTISEMENT