உலகம்

ஜப்பான் செய்தியாளருக்கு10 ஆண்டுகள் சிறை

7th Oct 2022 01:22 AM

ADVERTISEMENT

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் படமெடுத்ததற்காக, ஜப்பானைச் சோ்ந்த செய்தியாளா் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டோரு குபோடா என்ற அந்த செய்தியாளருக்கு, மியான்மரின் மின்னணு தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதற்காக 7 ஆண்டுகளும், போராட்டத்தைத் தூண்டியதற்காக 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மியான்மா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT