உலகம்

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

6th Oct 2022 02:37 PM

ADVERTISEMENT

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு இன்று காலை வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.

இதில், அங்கிருந்த 22 குழந்தைகள் உள்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் விரைந்து பிடிக்க தாய்லாந்து பிரதமர் ஆணை வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுபோல, கடந்த 2020 ஆம் ஆண்டு நில விவகாரத்தில் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ஒருவர் பல்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியானதோடு 57 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT