உலகம்

வேலையிழக்கும் 12,000 பேஸ்புக் ஊழியர்கள்??

6th Oct 2022 05:07 PM

ADVERTISEMENT

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தில் நடைபெறும் அமைதியான பணிநீக்கத்தினால் சுமார் 12,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தில் அமைதியான முறையில் பணிநீக்கம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. செயல்திறன் அடிப்படையில் குறைவான திறன் உடையோரை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த சில வாரங்களுக்குள் 15 சதவீத பணியாளர்கள் குறைக்கப்படலாம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சுமார் 12,000 ஊழியர்கள் வேலையிழக்கக்கூடும் என்று தெரிகிறது. 

மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், தற்போது புதிதாக யாரும் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் பணி நீக்கங்கள் இன்னும் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

நிறுவனத்தை சீர்செய்ய , அடுத்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் செலவினங்களைக் குறைப்பதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. 

 இதையும் படிக்க | ரூ. 10,000 வரை தள்ளுபடியில் ஷாவ்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்! எப்படி?

Tags : facebook meta
ADVERTISEMENT
ADVERTISEMENT