உலகம்

மோடியின் கோரிக்கையை மறுத்த உக்ரைன் அதிபர்

5th Oct 2022 08:32 AM

ADVERTISEMENT

ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துவதால் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். போரை நிறுத்த பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. தற்போது உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய 4 நகரங்களை ரஷிய தனது நாட்டுடன் இணைத்துள்ளது.

இதற்கிடையே ஐ.நா.வில் உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக நடைபெறும் அனைத்து வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்து நடுநிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, “ரஷியா-உக்ரைன் போரில் அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது சுற்றுச்சூழலுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடங்குவது அவசியம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய தமிழர்: மீட்புப் பணி தீவிரம்

மோடியின் கோரிக்கைகு பதிலளித்துள்ள ஸெலென்ஸ்கி, உக்ரைனின் நான்கு நகரங்களை சட்டவிரோதமாக ரஷியா இணைத்துள்ள சூழலில், ரஷியாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த உக்ரைன் தயாராக இல்லை என்று பதிலளித்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT