உலகம்

துபையில் கோயில் திறப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம்

5th Oct 2022 10:27 AM

ADVERTISEMENT

துபையில் கட்டப்பட்டிருக்கும் புதிய ஹிந்து கோயில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது.

துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலை, அதிகாரபூா்வமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்துவைத்தார்.

ADVERTISEMENT

இருப்பினும், சிறப்பு பூஜைகள் மற்றும் நிா்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதியே திறக்கப்பட்டுவிட்டது. அன்று முதல் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயில் திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏராளமான பக்தா்கள் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாள்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் கியூ.ஆா். குறியீடு முன்பதிவு நடைமுறை அடிப்படையில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஒவ்வொரு நாளும் 1,000 முதல் 1,200 பக்தர்கள் வழிபாடு நடத்தும் வகையில் முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். கோயிலில் தரிசனம் செய்ய அக்டோபா் இறுதி வரை வார இறுதி நாள்களுக்கான முன்பதிவு முழுமையாக ஏற்கெனவே முடிந்துவிட்டது. அக்டோபருக்குப் பிறகு எந்தவித கட்டுப்பாடுமின்றி பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.

தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதா்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவா்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவா்கள் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னா் மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்கின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT