உலகம்

2022 மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

3rd Oct 2022 03:20 PM

ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டு  மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வந்த பேபூ(Svante Pääbo) என்பவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.  

தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும்(அக்.4) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாளும்(அக். 5) அதைத் தொடர்ந்து பிற துறைகளுக்கான அறிவிப்புகளும் வரவுள்ளன. 

இதையும் படிக்க | மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?

ADVERTISEMENT
ADVERTISEMENT