உலகம்

பொய் செய்திகளுக்கு எதிரான பணிகளைத் தீவிரப்படுத்தும் கூகுள், யூடியூப்

30th Nov 2022 06:58 PM

ADVERTISEMENT

பொய் செய்திகளைத் தடுக்க கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் 1.3 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. 

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமாக கூகுள் உள்ளது. அதேபோல் பல்வேறு நாடுகளிலும் யூடியூப் பயனர்களைக் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய செய்திகளை தணிக்கை செய்வதிலும், பொய்யான செய்திகளை தடுப்பதிலும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிக்க | ‘நந்தன்’: சசிகுமாரின் புதிய பட அறிவிப்பு வெளியீடு

இந்நிலையில் செய்தியின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொய் செய்திகளைத் தடுக்க 1.32 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

ADVERTISEMENT

சர்வதேச செய்தி உறுதித்தன்மை கூட்டமைப்பின் மூலம் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதற்கான நிதி விடுவிக்கப்படும் எனவும், 65 நாடுகளில் உள்ள 135க்கும் மேற்பட்ட பொய் செய்திகளுக்கு எதிரான நிறுவனங்கள் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | நாளை அறிமுகம்! ஏற்றம் தருமா 'எண்ம ரூபாய்'?

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்,  செய்தியின் உறுதித்தன்மையை சரிபார்ப்பதற்கான செயலிகள் உருவாக்கம், ஆடியோ, விடியோ வடிவ செய்திகளின் உண்மைத் தன்மையை பகுப்பாய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT