உலகம்

சீனாவில் மீண்டும் அதே கொடூரக் காட்சிகள்.. கலங்கி நிற்கும் மக்கள்

26th Nov 2022 10:37 AM

ADVERTISEMENT

பெய்ஜிங்: சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளின் அலமாரிகளும் மீண்டும் காலியாகிவிட்டன. பொதுமுடக்கம் அச்சம் காரணமாக மக்கள் தேவைப்படும் பொருள்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியதே காரணம்.

கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், சீனத்தில் மீண்டும் மருத்துவமனைகளும், தனிமைப்படுத்திக் கொள்ளும் முகாம்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க.. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்திகை பார்த்தாரா அஃப்தாப்? அதிகாரிகள் தகவல்

நிலையற்ற தன்மை, அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் வருமோ என்றக் கவலையில் மக்கள் கலங்கி நிற்கின்றனர். 

ADVERTISEMENT

நாடு முழுவதும் நாள்தோறும் கரோனா பாதிப்பு மீண்டும் 30 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் 32,695 என்ற அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் 1860 பேர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரம் காட்டுகிறது.

இதையும் படிக்க.. ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி

ஏற்கனவே, பல இடங்களில், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்குள் முடக்கிவைக்கப்பட்டுள்ளனர். 

அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் செயலிகள், தங்களது திறனையும் தாண்டி பணியாற்றி வருகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT