உலகம்

உணவின்றி தவிக்கும் ஆப்கன் குழந்தைகள்

25th May 2022 06:42 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் பொருளாதார அரசியல் சூழல்கள் மாறியுள்ளன. ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து வந்த நிலையில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்காவிற்கு எச்சரிக்கையா?

இந்நிலையில் ஆப்கனில் நிலவி வரும் பொருளாதார மந்தம் மற்றும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருவதாக ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்நாட்டில் தொடர்ந்து நிலவும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக 11 லட்சம் குழந்தைகள் நடப்பாண்டு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை பாதிக்க வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐநா இது அவர்களை மருத்துவ சிகிச்சைகளை நோக்கி அழைத்துச் செல்லும் சூழலை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | உறக்கத்தைக் கெடுக்கும் காலநிலை மாற்றம்: ஆய்வு முடிவால் அதிர்ச்சி

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவ்வெண்ணிக்கை 18 ஆயிரமாகவும், 2022ஆம் ஆண்டு 28 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் 3 கோடியே 80 லட்சம் பேர் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT