உலகம்

'அவ்வளவு பெரிய ரஷ்யா போதவில்லையா' உக்ரைன் மூதாட்டியின் ஆதங்கம்

24th May 2022 01:15 PM

ADVERTISEMENT

தனது வீடு இடிந்து தரைமட்டமாகியிருப்பதைப் பார்த்த ஆத்திரத்தில், உக்ரைனின் பக்முட் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், அவ்வளவு பெரிய ரஷ்யா உங்களுக்குப் போதவில்லையா என்று அதிபர் விளாதிமிர் புதினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடவுள் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.. கடவுள் என்னை பார்த்துக் கொண்டுதானிருக்கிறார் என்று ஆதங்கத்தோடு கூறும் 82 வயதான மரியா மயஷலபாக், உக்ரைனின் பக்முட் பகுதியில் தனது வீடு தரைமட்டமாகிவிட்டதால், வலியுடனும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிக்க.. சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில்  மேட்டூர் அணை திறப்பு

கடவுளே என்னை இந்த துயரத்தில் இருந்து காப்பாற்று, காயமடையாமல் காப்பாற்று என்று காலையில் கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த மிகப் பயங்கர சத்தம் கேட்டது. அது என் தலை மீதே விழுந்ததைப் போல உணர்ந்தேன் என்கிறார் அந்த மூதாட்டி. ரஷிய படைகளின் குண்டு வீச்சில், ஒரு குண்டு அவரது வீட்டு சமையலறை மீது விழுந்ததைத்தான் அவர் இவ்வாறு நினைவுகூருகிறார்.

ADVERTISEMENT

நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷ்யா அவர்களுக்குப் போதவில்லையா என்ன? ஏன் இப்படி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்? என்றும் கூறினார்.

இதையும் படிக்க.. விஸ்மயா தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.12.50 லட்சம் அபராதம்

இந்த தாக்குதலில் மரியாவின் வீடு மட்டுமல்ல, அவரது அக்கம் பக்கம் வீடுகளும் தலைமட்டமாகியுள்ளன. தற்போது அங்கு எரிந்த கட்டைகள்தான் மிச்சமிருக்கின்றன. மிக அழகிய கிராமங்களாகக் காட்சியளித்த இப்பகுதி வீடுகள் இருந்ததற்கான சுவடுகளைக் கூட இழந்து காணப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT