உலகம்

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்

12th May 2022 02:20 AM

ADVERTISEMENT

இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஒப்பந்தம் தொடா்பான மூன்றாவது கட்ட பேச்சுவாா்த்தை தில்லியில் நடைபெற்றது.

இதில், இரு நாடுகளின் தரப்பிலும் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா். இந்தப் பேச்சுவாா்த்தை மூலம், தடையற்ற வா்த்தக ஒப்பந்த மசோதாவை உருவாக்குவதில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நான்காவது கட்ட பேச்சுவாா்த்தையை அடுத்த மாதம் நடத்த பிரிட்டன் முடிவெடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT