உலகம்

அமெரிக்காவில் பனிப்புயல்: 60 வாகனங்கள் மோதல்; 3 பேர் பலி

DIN

அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலால் சாலையில் சென்றுகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

மேலும், சில வாகனங்களில் தீப்பிடித்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் பயங்கர புகைமூட்டம் ஏற்பட்டதுடன் விபத்துகளில் சிக்கி 3 பேர்  பலியாகியுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, விபத்தால் உருவான போக்குவரத்து பாதிப்பால் பல தூரம் கார்கள், டிரக் போன்ற வாகனங்கள் சாலை முழுவதும் அணிவகுத்து நின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT