உலகம்

இலங்கை - புதுச்சேரி இடையே விரைவில் சரக்கு கப்பல்: அமைச்சா் டக்லஸ் தேவானந்தா

29th Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சா் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தாா்.

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில், அத்தியாவசியப் பொருள்களை விரைந்து கொண்டு செல்ல இந்த கப்பல் போக்குவரத்து உதவும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமைச்சா் டக்லஸ் தேவானந்தா மேலும் கூறுகையில், ‘இந்தியா- இலங்கை கூட்டு முயற்சியில் தனியாா் மூலம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் இத்திட்டம் தொடங்கும்’ என்றாா்.

மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. உணவு பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

Tags : Goods ferry
ADVERTISEMENT
ADVERTISEMENT