உலகம்

ஜி7 மாநாட்டை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் மோடி (விடியோ)

28th Jun 2022 01:13 PM

ADVERTISEMENT

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றாா்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, உலகத்தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடினேன். ஜி7 மாநாட்டில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கதாக அமைந்தது. உலகம் பல்வேறு நன்மைகளை அடையும் வகையில், பல சர்வதேச சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜொ்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 

இதையும் படிக்க.. ஒரே குடும்பத்தில் 9 பேர் மரணம்.. திடீர் திருப்பம்? தற்கொலைக் கடிதத்தால் சிக்கிய குற்றவாளி

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இதற்காக அவா் கடந்த சனிக்கிழமையன்று ஜொ்மனி புறப்பட்டுச் சென்றாா்.

இந்தப் பயணத்தின்போது ஜி7 நாடுகளின் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்ட  ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவா்களையும் பிரதமா் மோடி சந்தித்தார்.

 

இன்று ஜொ்மனி பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டார் பிரதமா் மோடி. அண்மையில் மறைந்த அந்நாட்டின் முன்னாள் அதிபா் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் அங்குச் செல்கிறார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத்தேர்வு செய்யப்பட்டுள்ள ஷேக் மொஹம்மது பின் சயீத் அல் நயானை சந்தித்து மோடி வாழ்த்துத் தெரிவிக்கவிருக்கிறார். அதையடுத்து அந்நாட்டுத் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

மனிதகுலத்தைப் பாதிக்கும் முக்கியமான சா்வதேச விவகாரங்களில் சா்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும்விதமாக, பிற ஜனநாயக நாடுகளான ஆா்ஜென்டீனா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜொ்மனி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT