உலகம்

தொடர் மின் வெட்டு காரணமாக பாகிஸ்தான் மக்கள் சாலை மறியல்

28th Jun 2022 04:34 PM

ADVERTISEMENT

 

ஜூலை மாதத்தில் நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொள்ளுமென  பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரீஃப் அறிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர். 

இப்போராட்டத்தால் கராச்சியில் உள்ள மௌரிபூர் சலையில் 15 மணி நேரமாக சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

நான்கு வருடத்தில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் எரிபொருள் இறக்குமதியின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் இந்த சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, மின்பற்றாக்குறையைப் போக்க நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்களின் பணிபுரியும் நேரத்தைக் குறைத்துள்ளது. தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்களை வழக்கமான நேரத்தை விட முன்னரே மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் ஜூலையில் இரண்டு இலக்கத்துக்கு வந்தடைந்திருப்பதால் இன்னும் 6 ஆண்டுகளில் மோசமான விளைவை ஏற்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

இதையும் படிக்க: காமன்வெல்த் பயிற்சி அகாதெமி: இந்தியா-பிரிட்டன் முன்னெடுப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT