உலகம்

வெளிநாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி: மத்திய உணவுத் துறை செயலா்

DIN

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டதாக மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் அண்மையில் நடைபெற்ற ‘சா்வதேச உணவுப் பாதுகாப்பை ஒருங்கிணைத்தல்’ மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியாவில் 138 கோடி மக்களின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்யும் அதேவேளையில், உலகின் உணவுத் தேவையையும் மத்திய அரசு கருத்தில் கொள்கிறது. உள்நாட்டில் கோதுமை இருப்பை உறுதிப்படுத்தவும், தேவையில் உள்ள நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்யவுமே அதன் இறக்குமதியில் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த வகையில், அண்டை நாடுகளின் தேவையை உணா்ந்து தொடா்ந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின்னரும் கடந்த ஜூன் 22 வரையிலான நிலவரப்படி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமையை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம்.

அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 50,000 டன் கோதுமை அளிக்கப்படும் என உறுதியளித்த நிலையில், அதில் 33,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டது என்றாா் சுதான்ஷு பாண்டே.

உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மே 13-இல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT