உலகம்

மின்னணு கார் சோதனை ஓட்டத்தில் விபரீதம்: 2 பேர் பலி

27th Jun 2022 04:20 PM

ADVERTISEMENT

 

சீனாவில் சோதனை ஓட்டத்தின்போது மின்னணு கார் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தாதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் மின்னணு கார்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை இடம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாவது தளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்னணு கார்களின் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. 

படிக்க'பிளின்கிட்'நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ': டெலிவரியில் புதிய வேகம்!

ADVERTISEMENT

 

அந்தவகையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த மின்னணு கார் சோதனை ஓட்டத்தின்போது, கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது மாடியிலிருந்து கார் தவறி கீழே விழுந்தது. 

இதில், கார் ஓட்டுநர் உள்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

படிக்ககருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

இந்நிலையில், விபத்து நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள மின்னணு கார் தயாரிப்பு நிறுவனம், விபத்துக்கான காரணம் கார் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பொது பாதுகாப்புத் துறையுடன் இணைந்து நிறுவனம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. விபத்து எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT