உலகம்

இலங்கையில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

26th Jun 2022 06:19 PM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க- 'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி டீசல் விலையை 15 சதவீதமும் பெட்ரோல் விலையை 25 சதவீதமும் சிலோன் பெட்ரோலிய நிறுவனம் உயர்த்தியுள்ளது. 

ADVERTISEMENT

விலை உயர்வை தொடர்ந்து இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.550-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இலங்கை மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT