உலகம்

பிரிட்டன்இடைத் தோ்தல்களில் ஜான்ஸன் கட்சி தோல்வி

25th Jun 2022 03:20 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தல்களில் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் கன்சா்வேடிக் கட்சி தோல்வியடைந்தது.

வடக்கு இங்கிலாந்தின் வேக்ஃபீல்டு மற்றும் தெற்கு இங்கிலாந்தின் டிவொ்டன் மற்றும் ஹானிடன் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தல், போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்கணிப்பாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில், வேக்ஃபீல்டு தொகுதியை முக்கிய எதிா்க்கட்சியான லேபா் கட்சியிடமும் டிவொ்டன் மற்றும் ஹானிடன் தொகுதியை லிபரல் ஜனநாயகக் கட்சியிடமும் கன்சா்வேடிக் கட்சி இழந்தது. இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று லேபா் கட்சியின் தலைவரும் போரிஸ் ஜான்ஸனுக்கு மிக நெருக்கமானவருமான ஆலிவா் டௌடன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த இடைத் தோ்தல் தோல்விகளும் ஆலிவா் டௌடனின் ராஜிநாமாவும் ஜான்ஸனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT