உலகம்

தென்கொரியாவில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா

8th Jun 2022 11:50 AM

ADVERTISEMENT


தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,3584 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,81,88,200 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,305 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 0.13 சதவிகிதமாக உள்ளது. 

சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் 114 பேர் தீவிரமான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 44.6 மில்லியனாக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 86.9 சதவிதம் ஆகும், மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 33.32 மில்லியனாக உள்ளது. இது மக்கள்தொகையில் 64.9 சதவிகிதம் ஆகும்.

புதன்கிழமை நிலவரப்படி, 4.19 மில்லியன் பேர் இரண்டு-டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். இது மக்கள்தொகையில் 8.2 சதவீதம் ஆகும் 

ADVERTISEMENT
ADVERTISEMENT