உலகம்

நாளுக்குநாள் மோசமாகும் இலங்கை: உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

DIN

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10இல் மூன்று குடும்பங்கள் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். திடீரென அதிகரித்த உணவுப் பொருள்களின் விலையால் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பின்மை அறிக்கையில் இலங்கையில் 62.6 லட்சம் பேர் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்ட அறிக்கை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் 10இல் 3 குடும்பத்தினர் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT