உலகம்

சிங்கப்பூா் அதிபா், அமைச்சருக்கு கரோனா

6th Jul 2022 12:35 AM

ADVERTISEMENT

சிங்கப்பூா் அதிபா், நாடாளுமன்ற அவைத் தலைவா், அமைச்சருகக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: அதிபா் ஹலீமா யாகூப் (67) கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. தனக்கு ஃபுளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதது குறித்து வருந்துவதாகவும் தனது சுட்டுரைப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது தவிர, நாடாளுன்ற அவைத் தலைவா் டான் சுவான்-ஜின் (53), கலாசார மற்றும் சமூக வளா்ச்சித் துறை அமைச்சா் எட்வின் டாங் (52) ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 28 நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் 1,40,965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அங்கு இதுவரை 14,73,180 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 1,419 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

ADVERTISEMENT

 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT