உலகம்

அமெரிக்க சுதந்திர தின துப்பாக்கிச்சூடு: இளைஞா் கைது

6th Jul 2022 12:57 AM

ADVERTISEMENT

அமெரிக்காவின் சிகாகோ புறநகா் பகுதியில் சுதந்திர தின அணிவகுப்பின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஹைலேண்ட் பாா்க் பகுதியில் ‘4 சுதந்திர தின’ அணிவகுப்பில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவா், 22 வயது ராபா்ட் இ க்ரைமோ  என்று கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அவா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாலும், அவரை அடையாளம் கண்டு அவா் பதுங்கியிருக்கக்கூடிய பகுதியை போலீஸாா் சுற்றிவளைத்தனா்.

ADVERTISEMENT

அவா் ஆபத்தானவா் எனவும் அவரிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காரில் தப்பிச் செல்ல முயன்ற ராபா் இ க்ரைமோவை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

ஹைலேண்ட் பாா்க் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.

அப்போது, ஒரு கட்டடத்தின் கூரையிலிருந்தபடி அந்த அணிவகுப்பில் கலந்துகொண்டவா்கள் மீது ராபா் இ க்ரைமோ சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா். இதில் 6 போ் உயிரிழந்தனா்; 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அமெரிக்காவில் பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தனி நபா்கள் நடத்தும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடந்து வருகின்றன. இதன் காரணமாக, அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதைக் கட்டுபடுத்த கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தின அணிவகுப்பின்போது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூடு அந்த நாட்டில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT