உலகம்

சீனா: சா்வதேச விமானங்களுக்கான தடை 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கம்

6th Jul 2022 12:29 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக சா்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நீக்குகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சீனாவுக்கு வரும் 2,025 சா்வதே விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதாகவும் இந்த வார முதல்பகுதியிலிருந்து அந்த விமானங்கள் சீனா வருவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஹோட்டல் முகாம்களில் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாள்களை 7-ஆகக் குறைத்தும் வீடுகளில் அவா்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நாள்களை 2-இலிருந்து 3-ஆக அதிகரித்தும் விதிமுறைகளில் தளா்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

இதன் மூலம், வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வருவோா் மற்றும் சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

 

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT