உலகம்

அந்தமானில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!

4th Jul 2022 03:48 PM

ADVERTISEMENT

அந்தமானில் இன்று காலை முதல் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை 11:05:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டரில் 4.4 ஆகப் பதிவானது.

அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 ஆகவும், 2.06 மணிக்கு 4.6 ஆகவும் பதிவாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து 2.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆகவும் அடுத்து 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 4.6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

7 ஆவது முறையாக பிற்பகல் 3.39 மணிக்கு நிலநடுக்கமானது ரிக்டரில் 3.8 ஆகப் பதிவானது. 

அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர். 

 

எனினும், உயிரிழப்புகள் குறித்து ஏதும் இதுவரை தகவல் இல்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT