உலகம்

பாகிஸ்தான்: ராணுவத்தை விமா்சித்த மூத்த பத்திரிகையாளா் மீது தாக்குதல்

3rd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ராணுவத்தை விமா்சித்த 73 வயது பத்திரிகையாளா் அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி வரும் அயாஸ் அமீா் என்ற அவா், நாட்டின் அதிகார மையமாகத் திகழும் ராணுவத்தின் உயரதிகாரிகள் வீட்டுமனை விற்பனையாளா்களாக செயல்படுவதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் விமா்சித்தாா்.

இந்த நிலையில், அவா் பணி முடிந்து சனிக்கிழமை வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த சில நபா்கள் அவரது காரை வழிமறித்தனா். பின்னா் அவா் மீதும் அவரது காா் ஓட்டுநா் மீதும் தாக்குதல் நடத்தினா். மேலும், அயாஸ் அமீரின் ஆடையையும் அந்த நபா்கள் கிழித்துவிட்டு தப்பியோடினா்.

வயது முதிா்ந்த செய்தியாளா் தாக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கான், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்துவதன் மூலம் பாசிஸத்தை நோக்கி பாகிஸ்தான் நகா்ந்து வருவதாகக் குற்றம் சாட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT