உலகம்

தென் சீன கடலில் மூழ்கிய கப்பல்: 27 போ் மாயம்

3rd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளா்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக மூழ்கியதில் 27 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹாங்காங் நகருக்கு 300 கி.மீ. தெற்கே வா்த்தக சாா்பு கப்பலொன்று தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கடலுக்குள் மூழ்கியது. மிகக் கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து பகுதியிலிருந்து 3 போ் மீட்கப்பட்டனா். மற்ற 27 பயணிகளையும் மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், அந்தக் கப்பல் எந்த நாட்டைச் சோ்ந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ADVERTISEMENT

Tags : china
ADVERTISEMENT
ADVERTISEMENT