உலகம்

மெக்ஸிகோ: 60 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

மெக்ஸிகோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 47,685 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60,34,602-ஆக உயா்ந்துள்ளது.இது தவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 47 போ் அந்த நோய்க்கு பலியாகினா். அதனைத் தொடா்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 3,25,716-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.மெக்ஸிகோவில் இதுவரை 51,92,957 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 5,15,929 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 4,798 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT