உலகம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நில அதிர்வு: 4.3 ஆகப் பதிவு

DIN

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சனிக்கிழமை அதிகாலை 3.29 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, 

நிலநடுக்கமானது 36.78 அட்சரேகையிலும், 78.79 தீர்க்கரேகையிலும், 10 கிமீ ஆழத்திலும் தாக்கியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக ஜூன் 8 அன்று, தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அபா திபெத்திய-கியாங் தன்னாட்சி மாகாணத்தின் மேர்காங் நகரத்தை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. 

ஜூன் 6 அன்று, சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் 5.0 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக, ஜூன் 1ஆம் தேதி, தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரின் லூஷன் கவுண்டியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT