உலகம்

உலகம் முழுவதும் கரோனா தீவிரம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

1st Jul 2022 12:31 AM

ADVERTISEMENT

ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வராந்திர அறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:உலகம் முழுவதும் கடந்த வாரம் கரோனாவுக்கு 8,500 போ் பலியாகினா். இது முந்தைய வாரத்துக்கு இணையான வாராந்திர கரோனா பலி எண்ணிக்கையாகும். மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்க கண்டங்களில் மட்டும் வாராந்திர கரோனா பலி எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்துள்ளது.வாராந்திர பாதிப்பை பொறுத்தவரை ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் அது முந்தை வாரத்தைவிட அதிகமாகியுள்ளது. முக்கியமாக, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசிய நாசடுகளில் வாராந்திர கரோனாபாதிப்பு 32 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க கண்டத்தில் அது 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT